இன்னொரு VRS வாய்ப்பளிக்கும் பிரபல நிறுவனம்
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனம் ,தொடர் தோல்விகளாலும், நிதி நெருக்கடியாலும் துவண்டுபோயிருந்த நேரத்தில் டாடா குழுமத்தின் முயற்சியால் அந்நிறுவனம் டாடாவுக்கு கடந்தாண்டு ஜனவரியில் விற்கப்பட்டது. டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை கையகப்படுத்திக்கொண்ட பிறகு பல புதுமைகளை செய்து வருகின்றனர். பழைய கொட கொடா விமானங்களை பழுதுபார்க்க அனுப்பியுள்ள டாடா குழுமம், புதிதாக, பெரிதாக அழகிய விமானங்களை வாங்க ஒப்பந்தங்களை பிரபல விமான நிறுவனங்களுடன் செய்துள்ளனர். இந்த நிலையில் ஏர் இந்தியாவில் விமானத்தில் பயணிக்காத பணியாளர்கள் அதாவது அத்தியாவசியம் இல்லாத பணியாளர்களில் விருப்பம் உள்ளவர்கள் பணியில் இருந்து தாமாக முன்வந்து ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்ற திட்டத்தை டாடா குழுமம் அண்மையில் அறிவித்தது. இதே மாதிரியான ஒரு வாய்ப்பை அந்நிறுவனம் மீண்டும் ஒரு முறை வழங்கியுள்ளது. புதிய உத்தரவின்படி ஏர்இந்தியாவில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவமும், 40 வயதுக்கு மேலும் இருந்தால் இந்த VRS வசதியை எடுத்துக்கொள்ள முடியும்.
அதிக திறமை இல்லாத அடிப்படை பணியாளர்கள் கூட இந்த VRs வசதியை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 100 பணியாளர்கள் இந்த வசதிகளை எடுத்துக்கொள்ள தகுதியானவர்களாக
அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது அந்த விமான நிறுவனத்தில் 11 ஆயிரம் பணியாளர்கள் மொத்தமாக பணியாற்றி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் VRS திட்டத்தின் முதல் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. சில பணியாளர்கள் இந்த சலுகை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரியதால் இந்த முடிவை ஏர் இந்தியா நிறுவனம் எடுத்துள்ளது. வரும் ஏப்ரல் மாதத்துக்குள் விருப்பம் உள்ளவர்கள் VRS எடுத்துக்கொள்ளலாம்,மார்ச் 17ம் தேதியான வெள்ளிக்கிழமை தொடங்கி இந்த வசதியை ஏர் இந்தியா நிறுவன ஊழியர்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்த VRS எடுத்துக்கொள்ளும் பணியாளர்களுக்கு பண பலன்களுடன் கூடுதலாக 1 லட்சம் ரூபாயும் அளிக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. கடந்த முறை VRS அறிமுகப்படுத்தப்பட்டபோது 4500 பேர் தகுதி பெற்றிருந்தாலும் அதில் ஆயிரத்து 500 பேர் இதனை எடுத்துக்கொண்டனர்.