இந்தியா பக்கம் கவனத்தை திருப்பிய ஆப்பிள் நிறுவன அதிகாரி…
உலகளவில் நிர்வாகத்தில் இந்தியர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர் என்பதற்கு அண்மையில் நடக்கும் அடுத்தடுத்த நியமனங்கள் சான்றாக அமைந்துள்ளன. இன்று உலகளவில் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியர்கள்தான் கட்டி ஆண்டு வருகின்றனர். குறிப்பாக ஆல்பபெட், கூகுள் மற்றும் பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்களை நியமித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்ப வேண்டும் என்று ஆப்பிள் நிறுவன நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் சந்தையில் மிகமுக்கியமான இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் இந்தியாவுக்குள்ளேயே முதன் முறையாக விற்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத்தலைவராக இருந்த hughes Aseman பதவி விலகிய நிலையில், தற்போது அந்த பதவியில் Ashish Chowdhary நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா தற்போது வரை ஐரோப்பிய விற்பனை குறித்த தகவல்களாக மட்டுமே டிம் குக்கிடம் அளித்து வருகின்றன. உலகில் பல நாடுகளில் ஆப்பிள் பொருட்கள் விற்பனை சரிந்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த காலாண்டில் அமோக விற்பனை நடைபெற்றுள்ளது. சீனாவுக்கு நிகரான வளர்ச்சியை இந்திய விற்பனை கொண்டுள்ளது. இந்தியாவில் ஆப்பிள் போன்கள் உற்பத்தியை தீவிரப்படுத்த honhai என்ற நிறுவனத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஆப்பிள் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.