மீண்டும் முதலிடம் பிடித்த ஆப்பிள்..
உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற பட்டியல் அண்மையில் வெளியாகியுள்ளது. இதில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் 2 விழுக்காடு உயர்ந்து ஒரு பங்கின் விலை 211 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பீடு 3.25 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. அதே நேரம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.24 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. கடந்த 5 மாதங்களில் மைக்ரோசாஃப்ட்டை ஆப்பிள் நிறுவனம் மிஞ்சுவது இதுவே முதல்முறையாகும். செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை தனது மென்பொருட்களில் பயன்படுத்தப்போவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்ததே இந்த திடீர் மதிப்பேற்றத்துக்கு காரணமாகும். மைக்ரோசாஃப்ட், ஆல்பபெட் நிறுவனங்களை விட மிகவும் பின்தங்கியுள்ள ஆப்பிள் நிறுவனம், தற்போது அதன் திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ளது. குறிப்பாக ஆப்பிள் நிறுவன பங்குகளின் மதிப்பு 2024-ல் 10 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 110 பில்லியன் அளவுக்கு பங்குகளை திரும்ப வாங்கிக்கொள்ள எடுத்த முடிவும் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு சிப்களை தயாரிக்கும் என்விடியா நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பை உயர்த்த முக்கிய காரணமாக அமைந்தது.
ஆப்பிள் மட்டுமின்றி உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமும் 30 விழுக்காடு தனது செயல்பாட்டில் தொய்வு காணப்பட்ட நிறுவனமாக இந்தாண்டில் அறியப்பட்டுள்ளது.