ஐபேட் விலையை குறைத்த ஆப்பிள்..
இந்தியாவில் 10 ஆவது தலைமுறை ஐபேட்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் குறைத்திருக்கிறது. கடந்த 2022 அக்டோபரில் இந்த வகை ஐபேட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளன. அதாவது கடந்த 2022-ல் 44,900 ரூபாயாக இருந்த 10 ஆவது தலைமுறை ஐபேட்கள் தற்போது 10 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டு 34,900 ரூபாயாக ஆப்பிளின் இணையதளத்தில் விற்கப்படுகிறது. குறிப்பிட்ட இந்த ஐபேடில் ஏ14 பயானிக் சிப், 10.9 அங்குல லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே ஆகியன இடம்பிடித்துள்ளன. இந்த ஐபேடில் 12 மெகா பிக்சல் கேமிராவும், சென்டர் ஸ்டேஜ் வசதியும் இருக்கிறது. ஆப்பிள் பென்சில் வசதியும் இதில் இருக்கிறது. 64 முதல் 256 ஜிபி அளவுக்கு சேமிப்பு வசதியும் இருக்கிறது. ஆப்பிளில் தற்போது 4 வகையான ஐபேட்கள் இருக்கின்றன. ஐபேட் புரோவின் தொடக்க விலை 99,900 ரூபாயாகவும், ஐபேட் ஏர் தொடக்க விலையாக 59,900 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றன. ஐபேட் மினி என்ற வகையும் உள்ளது இந்த வகை ஐபேட்களின் தொடக்க விலை 49,900 ரூபாயாக இந்தியாவில் விற்கப்படுகிறது. ஐபேடின் துணை பொருட்களான மேஜிக் கீபோர்டு, மற்றும் பென்சில் புரோ ஆகியவையும் சந்தியில் விற்கப்பட்டுள்ளன. மேஜிக் கீபோர்டின் தொடக்க விலை 29,900 ரூபாயாகவும், ஆப்பிள் பென்சில் புரோவின் தொடக்க விலை 11,900 ரூபாயாகவும் உள்ளது. புதிய ஐபேட் மாடல்கள் வரும் 15 ஆம் தேதியில் இருந்து சந்தையில் கிடைக்கும் வகையில் ஆப்பிள் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.