திடீர் தடையால் பாதிக்கப்படும் ஆப்பிள்,சாம்சங்..!!
உரிய உரிமம் இல்லாமல் வெளிநாடுகளில் இருந்து லேப்டாப்கள்,கணினிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது.இந்த திடீர் தடையால் ஆப்பிள்,சாம்சங் மற்றும் எச்பி ஆகிய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு நிறுவனங்களை சார்ந்து இருக்கக் கூடாது என்பதற்காகவே மத்திய அரசு இந்த தடையை விதித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்பு உரிமம் வாங்கும் முயற்சியில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடத் தொடங்கியுள்ளன. ஆனால் ஆப்பிள் நிறுவனம் லைசன்ஸ் பெற எவ்வளவு நாட்கள் பிடிக்கும் என்ற எந்த தரவுகளும் உடனடியாக வெளியாகவில்லை.மத்திய அரசு வெளியிட்டுள்ள தடை என்பது மக்களிடம் மட்டுமின்றி நிறுவனங்கள் மத்தியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகம் திடீரென பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே உலகளவில் நிலவும் சிக்கல்களால் இந்தியாவில் கணினிகள்,லேப்டாப்கள் விற்பனை சரிந்துள்ள நிலையில் உரிமம் இல்லாத லேப்டாப்கள் விற்பனைக்கு தடை விதித்திருப்பது பெரிய தலைவலியை நிறுவனங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில் இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்க பெரிய கட்டுப்பாடுகள் இல்லை. இதனால் இந்தியாவில் தங்கள் ஆலைகளை தொடங்க வைக்க மத்திய அரசின் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. சீனாவை மட்டுமே நம்பிஇல்லாமல், உற்பத்திக்கு இந்தியாவையும் பெரிய இடமாக மாற்றவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசு தரப்பில் கம்பி கட்டும் கதை விடப்படுகிறது. ஆனால் உண்மை நிலைவேறாக இருக்கிறது என்பதே நிதர்சனமாகும்.