விடாமல் தொடர்ந்து ஏற்றம் பெறும் ஆப்பிள் பங்குகள்
ஊர் உலகமே டெக் கம்பெனி பணியாளர்களுக்கு வேலை இழப்பு பற்றி கவலைப்பட்டு வரும் நிலையில் ஒரு நிறுவனம் மட்டும் தடைகள் எத்தனை வந்தாலும் தகர்த்தெறிந்து முன்னேறி வருகிறது.அந்த நிறுவனத்தின் பெயர் ஆப்பிள். வெள்ளிக்கிழமை மட்டும் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் விலை 5விழுக்காடு உயர்ந்துள்ளது.இது கடந்தாண்டு நவம்பருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வளர்ச்சியாகும். முன்பு எதிர்பார்த்ததைவிட காலாண்டு விற்பனை குறைவாகத்தான் இருப்பதாக டிம் குக் கருதிய நிலையில், விற்பனை சற்றே அதிகரித்துள்ளது.இது அமெரிக்காவில் அந்த நிறுவனத்தின் பங்குகள் விலையேற முக்கிய காரணமாக இருந்தது. ஏப்ரலுக்கு முந்தைய காலாண்டில் எதிர்பார்த்த அளவைவிட குறைவான லாபத்தைதான் ஆப்பிள் ஈட்டியது எனினும் இந்தியா உள்ளிட்ட பெரிய சந்தைகளை ஆப்பிள் நிறுவனம் ஆட்கொள்ளத் தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் இதன் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரியுடன் முடிந்த காலாண்டில் ஆப்பளின் வீழ்ச்சி 40 விழுக்காடாக இருந்தது. ஆனால் கடந்த காலாண்டில் யாரும் எதிர்பாராத வகையில், ஆப்பிளின் வீழ்ச்சி வெறும் 4.7 விழுக்காடாக சரிந்துள்ளது.