வேலைவாய்ப்பு தந்த ஆப்பிள்!!!
இந்தியாவிலேயே முதல் விற்பனை மையத்தை பிரபல நிறுவனமான ஆப்பிள், டெல்லி மற்றும் மும்பையில் திறந்துள்ளது. இதற்கான நிகழ்ச்சிகளில் அந்த நிறுவன சிஇஓ டிம் குக் இந்தியாவுக்கு வந்து பல்வேறுபிரபலங்களை சந்தித்தார்.இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் நேரடியாக 2 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நேரடி வேலைவாய்ப்பை உற்பத்தி துறையில் அளித்துள்ளதாக மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வேலை கிடைத்ததில் 70விழுக்காடு பேர் பெண்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் வயது 19முதல் 24-க்குள் இருக்கிறது என்றும் அமைச்சர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 5பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான உற்பத்தி இந்தியாவில் ஆப்பிள் 23ம் நிதியாண்டில் ஏற்றுமதி செய்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களை அசம்பிள் செய்யத் தொடங்கியது. தற்போது ஒரு ஆண்டுக்கு பத்து பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆப்பிள் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்கிறது அந்நிறுவன தரவுகள்.