உற்பத்தியை அதிகரிக்கும் ஆப்பிள்…
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்த வகை போன்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு ஆப்பிள் நிறுவன பொருட்களை தயாரித்துள்ளது.இப்போது வரை இந்தியாவில் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம்தயாரித்து வருகிறது. அடுத்தாண்டு முதல் ஏற்பாட்ஸ்களை உற்பத்தி செய்யத் தயாராக இருக்கின்றன. இந்தியாவில் செல்போன்களை மட்டும் தயாரிக்கும்ஆப்பிள் நிறுவனம், டேப்லட் மற்றும் கணினிகளை தயாரிப்பது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.உலகளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் 191 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.வாட்ச் போன்ற கையில் கட்டும் பொருட்களை 38.36பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் விற்கப்பட்டுள்ளன.இந்தாண்டின் முதல் 9 மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை4விழுக்காடு சரிந்துள்ளது. இந்தியாவில் 4 ரகமான ஐபோன்களும் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவிலேயே தயாரான ஐபோன்கள் முதன் முறையாக இந்தியாவிற்குள் மற்ற நாடுகளில் கிடைக்கும் போன்களின் தேதியிலேயே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படியே புதிய ஐபோன் விற்கப்பட்டு வருகிறது. உலகளவில் ஐபோன் சந்தையில் இந்தியா 5ஆவது இடத்திற்கு முன்னேறியது. 2023 நிதியாண்டில் 50 விழுக்காடு சந்தை மதிப்பல் இதன் விற்பனை அமைந்திருக்கிறது