மீண்டும் ஆப்பிள்தான் டாப்…
ஆப்பிள் என்ற நிறுவனம் பெயரில் உள்ள முதல் எழுத்தில் மட்டுமல்ல.செயல்திறன்,நிறுவனத்தின் மதிப்பை தக்கவைப்பதிலும் உலகளவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்துக்கு ஏன் இப்போது பில்டப் தருகிறீர்கள் என்று கேட்பீர்கள் காரணம் இருக்கிறது. அது என்னவெனில் கடந்தாண்டு ஜனவரியில் முதலிடத்தில் அதாவது இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய ஆப்பிள் நிறுவனம்,அவ்வப்போது லேசான சறுக்கல்களை சந்தித்ததே தவிர முழுமையாக எப்போதும் சரிந்தது இல்லை. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்த சூழலில் உலகில் பல்வேறு பிரச்னைகள் வந்தபோதும் கூட ஆப்பிள் நிறுவன பொருட்களின் மதிப்பு குறைந்தபாடில்லை. நிலைமை இப்படி இருக்கையில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் அமெரிக்க பங்குச்சந்தையில் 1.6விழுக்காடு திடீரென உயர்ந்து இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட விஷன் புரோ என்ற கருவியின் தாக்கத்தால் முதலீட்டாளர்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு ஆப்பிளில் பணத்தை கொட்டி வருகின்றனர். பல நாடுகளிலும் ஆப்பிள் நிறுவனம் தனது கிளைகளை அதிகரிக்க பணிகளை செய்து வருகிறது. ஆப்பிள் நிறுவனத்தில் பணப்புழக்கம் என்பது வேறு எந்த நிறுவனத்திலும் இல்லாத வகையில் இருக்கிறது என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. 3 டிரில்லியன் மதிப்பை நோக்கி ஆப்பிள் நிறுவனம் பயணித்து வருகிறது என்கிறார்கள் பங்குச்சந்தை நிபுணர்கள். அமெரிக்க பங்குச்சந்தைகள் வர்த்தக நேர முடிவில் ஒரு பங்கின் விலை அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 183 டாலர்களாக இருக்கிறது.