குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச்..
குழந்தைகளுக்கான ஆப்பிள் வாட்ச்சை இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோனின் உதவி இல்லாமலேயே குழந்தைகள் கூட எஸ்எம்எஸ் மற்றும் கால்கள் பேசலாம் என்ற வசதி இந்த ஆப்பிள் போன்களில் உள்ளன. குழந்தைகளின் உடல்நிலை, உரையாடல் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இந்த வாட்ச்கள் கொண்டுள்ளன. யாருடன் குழந்தைகள் பேசவேண்டும் என்பதை பெற்றோரே தரவுகளை அப்லோடு செய்யும் வகையில் இந்த வாட்ச்சில் அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. ஆப்பிள் வாட்ச்சில் குழந்தைகளுக்கான அவசர கால அழைப்பு எண்கள், மேப் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பிடித்துள்ளன. குழந்தைகள் வெளியில் ஓடி ஆடி விளையாட வேண்டும் என்பதற்கு அதிக முக்கியத்துவம் இந்த புதிய வாட்ச்சில் தரப்பட்டுள்ளது. குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் தங்கள் ஐபோன்களில் இருந்தே கண்காணிக்கும் வசதியையும் இந்த வாட்ச் கொண்டுள்ளது. பள்ளிக்கூட நேரத்தில் தொல்லை செய்யாமல் இருக்கும் வகையில் புதுப்புது அம்சங்களும் இந்த குழந்தைகளுக்காக ஆப்பிள் வாட்சில் இடம்பிடித்துள்ளது. பெற்றோரே தங்கள் பிள்ளைகளின் வாட்ச்சில் பள்ளி மோடையும் ஆன் செய்ய முடியும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். இந்த புதிய வாட்ச் ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 மணி நேரம் வரை தொடர்ந்து இயங்கும். இதற்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.