ஆப்பிளின் அட்டகாச அறிவிப்பு..!!
ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுவதிலும் முன்னணியில் இருக்கிறது. இந்த நிறுவனம் அண்மையில் மத்திய அரசிடம் ஒரு புதிய பரிந்துரையை அளித்தது அதாவது, இவ்வளவு நாட்களாக ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு அவை ஒரு இடத்தில் அசம்பிள் செய்யப்படும், இனி அந்த உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்க ஏற்பாடு நடப்பதாக ஆப்பிள் நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியில் கவனம் செலுத்துவதாகஆப்பிள் நிறுவனம் கூறி வருகிறது.இந்தியாவிலேயே உதிரி பாகங்கள் உற்பத்தி செய்தால் இந்தியாவின் உள்நாட்டு ஸ்மார்ட்போன் உற்பத்தி கணிசமாக உயரும் என்றும் ஆப்பிள் கூறியுள்ளது.
இதனை கேட்ட இந்திய நிதித்துறை அதிகாரிகள் வரிச்சலுகைகள் ஏதும் பிரத்யேகமாக தரமுடியாது என்று கூறியதாக தெரிகிறது. எனினும் இந்தியாவிலேயே உள்நாட்டு பொருட்கள் உற்பத்தி அதிகரித்தால் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவன செல்போன்களின் உற்பத்தி அடிப்படையில் சீனாவில் அதிகம் நடக்கிறது. இதனை இந்தியாவுக்கு மாற்றும் திட்டம் நடைபெற்று வருகிறது. இப்போது வரை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனை வாடகை நிறுவனங்களான விஸ்ட்ரான்,பாக்ஸ்கான், பெகட்ரான் மூலமாகத்தான் ஏற்றுமதி செய்து வருகிறது.Foxlink, Flex, Salcomp, Avary, Sunwoda and Jabil, ஆகிய நிறுவனங்கள்தான் உதிரி பாகங்கள் தயாரித்து அளித்து வருகின்றன. 2017ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபோன் தயாரிக்கப்பட்டு வருகிறது.ஐபோனின் மொத்த உற்பத்தியில் 7%மட்டுமே இந்தியாவில் இருந்து தயாராகிறது. கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி ஆப்பிள் நிறுவனம் தனது முதல் கடையை மும்பையிலும், 2ஆவது கடையை டெல்லியிலும் தொடங்கியது. இந்தியாவில் இருந்து ஐபோன் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.அண்மையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தில் 10.05 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிறுவனங்களுக்கு சலுகைகளை மத்திய அரசு அளித்து வருகிறது.2026ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை மத்திய அரசு செய்து வருகிறது.