ஆப்பிள் செய்யும் புதிய மாற்றம்…
உலகின் பலநாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ்கள்தான் அதிகம் விற்பனையாகின்றன. 2024ஆம் ஆண்டில் புதிய ரக ஏர்பாட்ஸ்கள் அணிவகுக்க இருக்கின்றன. புதிய புரோ வெர்சனும் வர இருக்கிறதாம். தோற்றத்தில் மாற்றம் மற்றும் ஆடியோ பர்பாமன்சிலும் மாற்றம் செய்யப்பட இருக்கிறதாம். 2024 Airpods max ரகம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 மற்றும் 3ஆம் தலைமுறை ஏர்பாட்ஸ்களை பட்டியலில் இருந்து நீக்கவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு வகைகளுக்கு மாற்றாக அதே விலையில் 4ஆவது தலைமுறை ஏர்பட்ஸ்களை களமிறக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய வகை ஏர்பாட்ஸ்களில் காதில் இருந்து வெளியே வரும் ஸடெம்களின் நீளம் குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிக நாய்ஸ் கேன்சலேசன் இந்த புதிய டிசைன்களில இடம்பிடிக்க இருக்கிறது.புதிய ஏர்பட்ஸில் டைப்-சி சார்ஜிங் வசதி உள்ளது. சுகாதாரம் சார்ந்த அம்சங்களையும் ஏர்படஸில் கொண்டுவரவும் ஆப்பிள் பணிகளை செய்து வருகிறது. 2025ஆம் ஆண்டு புதிய மேம்படுத்தப்பட்ட ஏர்பட்ஸ்களை களத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல தரப்பினரும் எளிதாக வாங்கும் விலையில் மாற்றவும் ஆப்பிள் நிறுவனம் பணிகளை செய்து வருகிறது.