அப்பல்லோ பைப்ஸ் ஈக்விட்டி போனஸ் அறிவிப்பு !
அப்பல்லோ பைப்ஸ் 2 : 1 விகிதத்தில் பங்குதாரர்களுக்கான போனஸை அறிவித்தது, ஒரு நபர் வைத்திருக்கும் ஒவ்வொரு அப்பல்லோ பங்குக்கும் இரண்டு கூடுதல் பங்குகள் போனசாகக் கிடைக்கும். அறிவிப்பு தேதி வெளியான நாளில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் தகுதியான பங்குதாரர்களுக்கு இந்த போனஸ் வரவு வைக்கப்படும்.
செப்டம்பர் உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ₹14 கோடியாக உயர்ந்துள்ளது. 2 :1 போனஸ் ஈக்விட்டி பங்குகளை வழங்குவதற்கான கால வரையறையாக 04 டிசம்பர் 2021 ஐ அப்பல்லோ பைப்ஸ் நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.