அப்டஸ் வேல்யூ ஹவுசிங் IPO வாங்குவதற்கு முன் ஒரு நிமிடம்!
அப்டஸ் வேல்யூ ஹவுசிங் ஃபைனான்ஸ் (Aptus Value Housing Finance India Ltd) IPO வருகிற ஆகஸ்ட் 10 அன்று துவங்குகிறது. ₹2 முக மதிப்பு கொண்ட ₹2780.05 கோடி வரையிலான மதிப்புக் கொண்ட ஈக்விட்டி பங்குகளின் முக்கிய IPO ஆகும். ஒரு பங்கு ₹346 முதல் ₹353 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆர்டர் அளவு 42 பங்குகள்.
முதலீடு செய்வதற்கு முன்பாக இந்த நிறுவனத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்
அப்டஸ் வேல்யூ ஹவுசிங் என்பது சில்லறை வணிகத்தை மையமாகக் கொண்ட வீட்டு நிதி நிறுவனமாகும். இது முதன்மையாக இந்தியாவின் கிராமப்புற மற்றும் சிறுநகர்ப்புற சந்தைகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட சுயதொழில் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறது. CRISIL அறிக்கையின்படி, டிசம்பர் 31, 2020 முடிவில் இந்த நிறுவனத்தின் மதிப்பு ₹37,909.31 மில்லியன். AUM இன் அடிப்படையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய வீட்டு நிதி நிறுவனங்களில் ஒன்றாகும்.
அப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைனான்ஸ் இந்தியா லிமிடெட், சில்லறை வாடிக்கையாளர்களுக்கு வீடுகளை வாங்கவும், குடியிருப்பு சொத்து, வீடு மேம்படுத்தல், மற்றும் விரிவாக்கம், சொத்துக்களுக்கு ஈடான கடன்கள் மற்றும் வணிகக் கடன்களுக்கு வீட்டுக் கடன்களை வழங்குகிறது. இது எல்லா வகையான கடன் வழங்கும் சேவைகளையும் மேற்கொள்கிறது.
நிறுவனத்தின் பிளஸ் பாயிண்ட்டுகள்
1) AUM அடிப்படையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய வீட்டு நிதி நிறுவனங்களில் ஒன்று.
2) தென்னிந்தியாவில் 181 கிளைகளைக் கொண்ட வலுவான நெட்வொர்க்.
3) எதிர்காலத்தில் வலுவான வளர்ச்சி உள்ள பெரிய சந்தையில் இருத்தல்.
4) தரமான சொத்து மதிப்பு மற்றும் கடன் இடர் மேலாண்மை.
5) தொடர்ந்து சிறப்பாக இயங்கும் உறுதி செய்யப்பட்ட செயல்திறன்.
ஐபிஓ தொடக்க தேதி (IPO Start Date) – ஆகஸ்ட் 10, 2021
ஐபிஓ இறுதி தேதி (IPO End Date) – ஆகஸ்ட் 12, 2021
ஒதுக்கீடு தேதி (Basis of Allotment Date) – ஆகஸ்ட் 18, 2021
ஐபிஓ பட்டியல் தேதி (IPO Listing Date) – ஆகஸ்ட் 24, 2021
முக மதிப்பு (Face Value) – ரூ 2
ஐபிஓ விலை (IPO Rate) – 346 முதல் ₹ 353 வரை
மார்க்கெட் லாட் அளவு (Market Lot Size) – 42 பங்குகள்
பட்டியல் இடம்பெறும் சந்தை – பிஎஸ்இ, என்எஸ்இ (BSE, NSE)
Source: chittorgarh.com