அதானி நிறுவன பங்குகளை விற்ற அரபு நிறுவனம்..
அபுதாபியைச் சேர்ந்த IHC என்ற நிறுவனம் அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் பெரியளவு முதலீடுகளை செய்திருந்தது.இந்த நிலையில் குறிப்பிட்ட சில பங்குகளை மட்டும் அபுதாபி நிறுவனம் வேறொரு நபருக்கு விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட்டை சரிசெய்வதற்காக இந்த விற்பனை நடந்திருப்பதாகவும்,அதானி நிறுவனத்துடன் தங்களுக்கு உள்ள தொடர்பு தொடரும் எனவும் IHC தெரிவித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி,அதானி டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட நிறுவனங்களில் முறையே 1.26% மற்றும் கிரீன் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் 1.41% பங்குகளில் முதலீடு செய்திருந்தது. தற்போது இந்த பங்குகளை வேறொரு நிறுவனத்துக்கு கைமாற்றுவதற்கான அறிவிப்பை IHC வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமா சட்ட நடவடிக்கைகளை அபுதாபி நிறுவனம் செய்திருக்கிறது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் கடந்தவாரம்தான் டோட்டால் எனர்ஜிஸ் SE என்ற நிறுவனத்துடன் 300 மில்லியன் டாலர் முதலீட்டை செய்திருந்தது. சரிபாதி பங்குதாரராக டோட்டால் நிறுவனத்தை மாற்றவும் முயற்சிகள் நடைபெற்றன. பல்வேறு மாற்றங்களை சந்தித்து வரும் அதானி குழுமத்தின் கிரீன் எனர்ஜி நிறுவனம் 0.61 % சரிந்தும்,அதானி எனர்ஜிசொல்யூஷன்ஸ் நிறுவன பங்குகள் 1.73%விலை உயர்ந்தும் வர்த்தகம் நடைபெற்றன.