இந்தியாவை விட்டு வெளியேறுகிறார்களா 6,500 கோடீஸ்வரர்கள்?
ஹென்லி பிரைவேட் வெல்த் மைக்ரேஷன் என்ற பெயரில் அறிக்கை அண்மையில் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவில் அதிக வசதி படைத்த 6,500 பேர் இந்தியாவில் இருந்து வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இந்த ஒரே ஆண்டில் வெளியேறுவோரின் எண்ணிக்கை என்கிறது அந்த அறிக்கை. உலகளவில் அதிக செல்வம் படைத்த பணக்காரர்கள் வெளியேறும் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. ஒரே ஆண்டில் 13,500 பேர் சீனாவில் வெளியேறுகின்றனர். இந்தியா,சீனா மட்டுமின்றி இந்த பட்டியலில் பிரிட்டனில் இருந்து 3200பேரும், ரஷ்யாவில் இருந்து 3,000 பேரும்,வெளியேறுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் இருந்து பெரிய பணக்காரர்கள் வெளியேறுவது நல்லது இல்லை என்று கூறும் நிபுணர்கள்,உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் இருந்து இத்தனை பணக்காரர்கள் வெளியே செல்வது சரியில்லை என்கிறார்கள். வசதி படைத்தோர் இந்தியாவில் தங்கும்பட்சத்தில் அவர்கள் சார்பில் சிறந்த நிதிசூழல்,சுகாதார வசதி,தொழில்நுட்பத்துறைகள் வளரும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதேநேரம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துவருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. நியு வேர்ல்ட் ஹெல்த் என்ற நிறுவனம் சார்பில் நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு உலகளவில் மிகப்பெரிய கவனம் ஈர்த்திருக்கிறது.