GST உபரி நிதி இவங்களாலதான் கிடைக்குதா?
சரக்கு மற்றும் சேவை வரியின் மீதான cess எனப்படும் உபரி வரியை அண்மையில் மத்திய அரசு உயர்த்தியது.இது எந்தமாதிரியான பொருட்களுக்கு அதிகம் என்று பார்த்தால் சிகரெட்,பான்மசாலா,மற்றும் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாவில் இதற்கான அம்சங்கள் இடம் பிடித்திருந்தன. இந்த பொருட்கள் மீதான ஜிஎஸ்டி செஸ் வரி என்பது 51விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. பான்மசாலாவுக்கு 135 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. ஒரு ஆயிரம் புகையிலை சுருள்களுக்கு 4 ஆயிரத்து 170 ரூபாய் மற்றும் அதனுடன் கூடுதல் வரியும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கூடுதல் வரிவிதிப்பின் மூலம் வரி ஏய்ப்பு செய்வோரை தடுக்க முடியும் என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் எனப்படும் வரி பான்மசாலா மீது பல மடங்கு உயர்த்துவது தொடர்பாக பல மத்திய அமைச்சர்கள் இணைந்து இந்த புதிய சட்டத்திருத்தத்தை கொண்டுவந்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.