உயர்கிறதா காப்பீட்டு கட்டணம்?
கடந்த 14 ஆம் தேதி மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் 3-ஆம் நபர் மோட்டார் வாகன காப்பீட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 3-ஆம் நபர் காப்பீடு எடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது எதற்கு என்றால், வாகனம் ஓட்டுவோருக்கு மட்டுமல்ல, 3-ஆவது நபருக்கும் காப்பீடு வழங்கும் வகையில் இதனை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இது வணிக ரீதி மற்றும் தனிப்பட்ட வாகனங்களுக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை விபத்து நேரிடும்பட்சத்தில் வாகனம் மோதிய பிறகு ஏற்படும் பாதிப்புக்கு 3-ஆம் நபருக்கு வாகனம் வைத்திருப்பவர் பணம் தர வேண்டியிருக்காது என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. 2023 முதலே இது அமலுக்கு வந்துவிட்டதாகவும்,ஒரு பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தனிநபரின் காராக இருந்தால் ஆயிரம் சிசிக்கும் குறைவாக இருந்தால் 2ஆயிரத்து 94 ரூபாயாகவும், ஆயிரம் சிசிக்கு அதிகமாக இருக்கும்பட்சத்தில் 3,416 ரூபாயாகவும்,1500 சிசிக்கு மேலே சென்றால் 7,897 ரூபாயாகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டும். இருசக்கர வாகனத்துக்கு 75 சிசிக்கு குறைவாக இருந்தால் 538 ரூபாய்,75-150 சிசியாக இருந்தால் 714 ரூபாய், 15-300 சிசிக்கு 1366 ரூபாய், 350 சிசிக்கு மேலே இருந்தால் 2,804 ரூபாய், மின்சார வாகனங்கள் குறிப்பாக காராக இருந்தால் 30 கிலோவாட் திறனுக்கு 1780 ரூபாய், 30-65 கிலோவாட் எனில் 2,904, 65 கி.வா மேல் இருந்தால் 6,712 ரூபாயும், மின்சாரஇருசக்கர வாகனத்தில் 3 கிலோவாட்டுக்குள் இருந்தால் 457 ரூபாய், 3-7 கி.வா-607, 7-16 கிலோவாட் 1161 ரூபாயும், 16 கிலோவாட்டுக்கு மேலே சென்றால் 2,383 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு சேர்த்து ஒரே முறையில் கட்டும் வசதியையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.