இந்திய கிரிப்டோ கரன்சிகளுக்கும் வருகிறதா கட்டுப்பாடுகள்?
உலகின் பல நாடுகளிலும் கிரிப்டோகரன்சியை அங்கீகரிப்பதா வேண்டாமா என்ற கேள்வி பல காலமாக இருந்து வருகிறது. இந்தசூழலில் இந்திய கிரிப்டோ கரன்சி நிறுவனங்கள் அரசாங்கத்தை அனுகியுள்ளதாக கூறப்படுகிறது. நிதி சார்ந்த இன்டலிஜன்ஸ் அமைப்பு இதுகுறித்து வரைவு விதிகளை வகுத்திருப்பதாக கூறப்படுகிறது. பண மோசடி மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படும் பணம் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய விதிகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. கடந்த 2022 நிதியாண்டிலேயே டிஜிட்டல் சொத்துகளுக்கு நிதி அமைச்சகம் வரைவு அறிக்கையை தயார் செய்தது. இதில் மேலும் பல ஷரத்துகளை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. புதிய வரைவு விதிகள் அரசிதழில் கடந்த மார்ச் 10ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.இதனை உறுதிபடுத்தும் இறுதி வடிவம் வரும் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. புதிய விதிகளின்படி KYC சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பணப்பரிமாற்றத்தை மத்திய அரசு கண்காணித்துக்கொண்டே இருக்கும்.அமெரிக்காவில் இருப்பதைப்போலவே நிதி பரிமாற்றம் குறித்த தகவல்கள் எப்போது அரசாங்கம் கேட்டாலும் தரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கிரிப்டோ கரன்சிகளுக்கு டோக்கன் வழங்கும் பணிகளும் இந்தியாவில் தொடங்கியுள்ளதாகவும் அது சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.