யுபிஐ கட்டுப்பாடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பணப்பரிவர்த்தனை ரொக்கத்தில் இருந்து டிஜிட்டலுக்கு மாறியபிறகு, ரோட்டோர பானிப்பூரி கடை முதல் பெரிய ஜிலு ஜிலு ஏசி அறை பொருட்கள் வரை மக்கள் பொருட்களை வாங்க டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைத்தான் விரும்புகின்றனர்
கூகுள் பே, போன்பே, அமேசான் பே என ஏகப்பட்ட போட்டியாளர்கள் இந்த துறையில் நுழைந்துள்ளனர். எனினும் அனைத்து போட்டியாளர்களும் பொதுவான ஒரு இயங்குதளம் மூலமே பணத்தை தங்கள் வங்கிக்கணக்கில் இருந்து கடைக்காரர்களுக்கு அனுப்பி வருகின்றனர். நீங்கள் எப்போதாவது அதிகபட்சம் எவ்வளவு முறை யுபிஐ மூலம் அனுப்ப முடியும் என யோசித்திருக்கிறீர்களா, பலரும் சில பரிவர்த்தனைகளை மட்டுமே செய்வது வழக்கம் ஆனால் அதற்கும் உச்ச வரம்பு இருக்கத்தான் செய்கிறது. யுபிஐ மூலம் பணத்தை இன்னொருவருக்கு அனுப்பவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அது வங்கிக்கு வங்கி மாறுபடும், உதாரணமாக கனரா வங்கி வாடிக்கையாளர்கள் ஒருநாளைக்கு அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே யுபிஐ மூலம் இன்னொருவருக்கு அனுப்ப முடியும், ஆனால் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கியில் ஒரு நாளில் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரை அனுப்பிக் கொள்ளலாம். ஒரு நபர் தற்போது வரை அதிகபட்சமாக 20 பரிவர்த்தனைகளை மட்டுமே யுபிஐ மூலம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. 21வது முறை யுபிஐ மூலம் ஒருவர் பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டுமானால் அவர் அடுத்த 24 மணி நேரத்துக்கு காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதேபோல் கூகுள் பே மூலம் ஒருவருக்கு பணம் அனுப்ப முற்பட்டால் ஒரு நாளில் அதிகபட்சம் 10 பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய NPCI அனுமதி அளிக்கும் போன்பே மற்றும் கூகுள் பேவில் அதிகபட்சமாக ஒருநாளைக்கு வங்கி விதிகளுக்கு ஏற்ப அதிகபட்சம் 1 லட்சம் ரூபாயும், 10 அல்லது 20 பரிவர்த்தனைகள் வரை மட்டுமே செய்ய முடியும் பேடிஎம், அமேசான் பேவும் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுப்ப வகை செய்கிறது. எப்படி குட்டி கரணம் அடித்தாலும் 20 பரிவர்த்தனைகளுக்கு மேல் உங்களால் பணத்தை அனுப்ப முடியாது என்பதே தற்போதைய விதியாக உள்ளது