தாய்லாந்து போகப்போறீங்களா..இந்தாங்க ஹேப்பி நியூஸ்..
எப்ப பாத்தாலும் வேலை, கடன், ஸ்டெர்ஸ் என இருப்போருக்கு ரிலாக்ஸ் பண்ண ஒரு சிறந்த இடமாக தாய்லாந்து இருக்கிறது. செலவும் குறைவு, சுற்றிப்பார்ப்பதற்கும், ரசித்து ருசித்து மகிழவும் தாய்லாந்தில் நிறைய அம்சங்கள் உள்ளன.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு வரும் இந்தியர்கள் மற்றும் தைவான் நாட்டவருக்கு விசாவில் கட்டுப்பாடுகள் கிடையாது என்று தாய்லாந்து அறிவித்துள்ளது. வரும் மாதம் முதல் தாய்லாந்துக்கு செல்ல விசா நடைமுறைகள் தேவையில்லை. மே 2024 வரை இந்த சலுகை அளிக்கப்பட இருக்கிறது. சுற்றுலா சீசன் என்பதால் இந்த அறிவிப்பு டிராவலர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தியாக அமைந்திருக்கிறது. புதிய அறிவிப்புகளின்படி விசா இல்லாமல் இந்தியர்களும்,தைவான் நாட்டவரும் தாய்லாந்தில் 30 நாட்கள் வரை தங்கிக்கொள்ளலாம். மலேசியா,சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மட்டும் தாய்லாந்துக்கு 12 லட்சம் பேர் ஆண்டுக்கு சுற்றுலா வருகின்றனர். இதற்கு அடுத்த இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் முதல் சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தாய்லாந்துக்கு இந்தாண்டு தொடக்கம் முதல் அக்டோபர் 29 வரை 2கோடியே 20லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். இதனால் தாய்லாத்துக்கு சுற்றுலா சார்ந்த வருவாயாக 25 புள்ளி 67 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைத்திருக்கிறது. இந்தியாவில் இருந்தும் தாய்லாந்துக்கு அதிகம் பேர் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். இருநாடுகளுக்கு இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்தும் வகையில், இந்த அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.