வருமானத்த மறைக்கிறீர்களா..இந்தா பிடி நோட்டீஸ…!!!
வருமான வரித்துறை அண்மையில் சிலருக்கு நோட்டீஸ் அளித்துள்ளது. இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம், ஆனால் அங்குதான் விஷயமே இருக்கிறது.நோட்டீஸ் பெறப்பட்டவர்கள் வழக்கமான சம்பளத்தை மட்டும் வருமான வரி கணக்குகளை தாக்கல்செய்யும் நிலையில் மூன்லைட்டிங் எனப்படும் இரண்டாவது வருமானத்தை மறைத்தவர்கள்தான் என்கிறது வருமானவரித்துறை. ஆயிரத்து 100 பேருக்கு இந்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 2019-20, 20-21நிதியாண்டில் வருவாயை இவர்கள் மறைத்ததாக புகார் கூறப்படுகிறது. வழக்கமான சம்பளம் இல்லாமல், பலரும் ஆன்லைனில் மூன்லைட்டிங் சம்பளம் அனுப்புகின்றனர். மேலும் சிலருக்கு வெளிநாடுகளில் இருந்தும் பணம் வருகிறது. ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களுக்கு இத்தகைய வருமானம் வந்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி செய்திருக்கின்றனர். ஆனால் வருமான வரியில் வழக்கமான சம்பளத்துக்கு மட்டுமே வரி செலுத்தப்படுகிறது. 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குவோரை தேர்வு செய்து இந்த நோட்டீஸ் முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.பான் கார்டை வைத்து இந்த பரிவர்த்தனைகளை எளிதில் அடையாளம் கண்டுவிட முடிகிறது.வழக்கமான சம்பளத்தைவிட இரட்டிப்புக்கும் அதிகமான சம்பளம் பெற்றும் சிலர் அதற்கு முறையான வரி செலுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் ரொம்ப விவரமாக ரொக்கப்பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அது குறித்தும் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்ற வசதி கிடைத்ததும்,அதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட சில டெக் கேடிகள் இந்த வேலையை செய்திருப்பதாக ஐடி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவர்களுக்கு இன்னும் நோட்டீஸ் அளிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.