கேப்டன் விஜயகாந்த் ஸ்டைலில் விளாசி எடுத்த கட்டுரை..
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விரிவான அலசல் கட்டுரை பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதை அப்படியே சுறுக்கி உங்கள் கவனத்துக்கு அளிக்கிறோம்..உலகின் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் ஆப்பிள் போன்கள், சொகுசு கார்களுக்கு வரிசையில் நிற்கும் நிலை உள்ளது. ஆனால் அதே சமயம் சரியான உணவு,உடை மற்றும் வீடு கூட இல்லாத ஏராளமான மக்கள் இந்தியாவில் இருப்பதாக கூறுகிறது புள்ளிவிவரம். உலக சமநிலையற்ற அறிக்கை அண்மையில் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவில் 10விழுக்காடு மக்களிடம் மட்டுமே தேசத்தின் 57 விழுக்காடு வருவாய் தங்கியிருப்பதாகவும், 1 விழுக்காடு மக்களிடம் 22% சொத்துகள் கிடப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த நேரம் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பலர் தவித்து வரும் சூழலில் இந்தியாவில் செல்லப்பிரானிகளை தத்தெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத வகையில் கிராமபுற பணவீக்கம் முதல்முறையாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் உணவு தேவை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் அரசு தரவுகளும்,fmcg நிறுவன தரவுகளும் தெரிவிக்கின்றன. அதாவது மக்களின் உணவுதேவை வித்தியாசப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 5,10,20 ரூபாய் பாக்கெட்டுகளாக உணவுப்பொருட்களை விற்பனை செய்வது நல்ல லாபத்தை தருவது தெரியவந்துள்ளது
உணவு ஒரு பக்கம் என்றால் உடைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. உடை மற்றும் காலணிகளின் விலை மார்ச்சுடன் முடிந்த ஆண்டில் 8 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. எலிவலையானாலும் தனிவலை வேண்டும் என்பதைப்போல தனியாக ஒரு வீடு வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக அதிகரித்துள்ளது. அதிகரித்து வரும் ஜல்லி,செங்கல்,சிமெண்ட்,கம்பிகளின் விலையால் பட்ஜெட் வீடுகள் கட்டுவதில் பெரிய சவால் நிலவுவதாக கட்டுமானத்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டுக்கடன்களின் அளவு கணிசமாக உயர்ந்திருப்பதால் வீடுகளை வாங்குவோரின் எண்ணிக்கையும் கடுமையாக குறைந்திருக்கிறது. ஒருபக்கம் விலையுயர்ந்த பொருட்கள் வாங்கும் ஆர்வம் அதிகரிப்பு, மற்றொரு பக்கம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் அல்லாடும் நிலை என்று சமநிலை இல்லாத ஒரு தேசமாகவே இந்தியா இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.