தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழியே!!!
இந்தியர்களையும் கிரிக்கெட்டையும் பிரிக்கவே முடியாது. ஐபிஎல் போட்டிகளை நடத்திய லலித் மோடியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து இருக்க முடியாது. வரி ஏய்ப்பு செய்ததாக புகாரில் சிக்கிய லலித் மோடி 2010ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு திரும்பவில்லை. இவர் பற்றி இப்போது ஏன் பேசவேண்டும் என நீங்கள் கேட்கலாம், விஷயம் என்னவென்றால் , லலித் மோடியிடம் உள்ள அனைத்து வணிகங்கள், தொழில்கள், அறக்கட்டளைகள் அனைத்துக்கும் மகன் சுசிர் மோடியே வாரிசு என்று லலித் மோடி அறிவித்துள்ளார். 28வயதாகும் சுச்சிர் , லலித்தை போலவே ஆடம்பர வாழ்வில் நாட்டம் கொண்டவர். உல்லாச கேளிக்கை இவர் வெளியிடும் புகைப்பட ஆல்பங்கள் மூலம் பிரபலம். லலித் மோடிக்கு சொந்தமான நிறுவனக் கட்டமைப்பு மட்டுமின்றி சுச்சிர் தனியாக ஒரு சிகரெட் கம்பெனியின் தலைமையாக இருக்கிறார். மும்பை மற்றும் லண்டனில பள்ளி படித்த சுச்சிர். 28 வயதிலேயே சாம்ராஜ்ஜியத்தை ஆள்கிறார்