வழக்கம் போல பொருந்தாமலே பேசிய அமெரிக்க அதிகாரி..!
அமெரிக்க கரூவூல செயலாளரான ஜானட் எலென் என்ற பெண் அதிகாரி அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அதில் அமெரிக்காவின் பணவீக்கம் கணிசமாக குறைந்து வருவதால் இனி பணி நீக்கம் உள்ளிட்ட பொருளாதார மந்தநிலை பாதிப்புகள் இருக்காது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளால் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் பணவீக்கம் ஏற்ற பாதைக்கு திரும்புவதாக தெரிவித்துள்ளார். 5 லட்சம் பேருக்கு வேலை மற்றும் அமெரிக்க அரை நூற்றாண்டு வரலாற்றிலேயே இல்லாத அளவாக வேலைவாய்ப்பு இன்மை விகிதம் குறைவாக பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர் பெயர் அளவுக்கு கூறினாலும் உண்மையில் கடந்த 2 மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் சுமார் 1 லட்சம் பேரை வேலையை விட்டு தூக்கிய நிலையில் கருவூல செயலரின் பேச்சு எதிர்ப்புகளை பெற்று வருகிறது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணவீக்கம் மிக அதிகமாக இருந்ததாக கூறியுள்ள எலென், ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி அமைந்ததும், கடந்த 6 மாதங்களில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு பணவீக்கம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.விரைவில் கச்சா எண்ணெய் விலை மற்றும் மருந்துகங்களில் கிடைக்கும் மருந்துகளின் விலையும் குறைய வாய்ப்பிருப்பதாக அமெரிக்க கருவூல செயலர் ஜானட் எலென் நம்பிக்கை தெரிவித்தார்.