BharatPe MD ராஜினாமா – முதலீட்டாளர்கள் மீது அஷ்னீஷ் புகார்..!!
பாரத்பேயின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான அஷ்னீர் குரோவர், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
BharatPe முதலீட்டாளர்கள் மீது புகார்:
நிறுவனத்தின் குழுவுக்கு மார்ச் 1-ஆம் தேதி அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தில், பாரத்பேயின் முதலீட்டாளர்களும் வாரியமும் நிறுவனர்களை ‘அடிமைகளாக’ நடத்துவதாகவும், ‘தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நிறுவனர்களை நீக்குவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஃபின்டெக் நிறுவனத்தின் பரிவர்த்தனைகள் பற்றிய சுதந்திரமான விசாரணையின் விவரங்களுடன், BharatPe போர்டு உறுப்பினர்களால் விவாதம் நடத்த இயலாமை என்று குறிப்பிட்டதன் காரணமாகவே தனது ராஜினாமாவைச் சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
நிறுவனத்திற்குள் நடந்து வரும் ‘ஆளுமை மதிப்பாய்வு’க்கு எதிராக கடந்த வாரம் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையம் (SIAC), அவரது அவசர மனுவை நிராகரித்ததன் பின்னணியில் க்ரோவரின் ராஜினாமா வந்துள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் நீக்கம்:
ஆலோசனை நிறுவனமான Alvarez & Marsal-இன் ஆரம்ப விசாரணையில், க்ரோவரின் குடும்ப உறுப்பினர்கள், BharatPe –வின் முன்னாள் கட்டுப்பாட்டுத் தலைவர், அவரது மனைவி மாதுரி ஜெயின் உட்பட, நிறுவனத்தில் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, மாதுரி ஜெயின் மற்றும் அஷ்னீஷ் குடும்ப உறுப்பினர்களும் நீக்கம் செய்யப்பட்டனர்.