விலைய சொல்லு நாங்க வாங்கிக்கிறோம்!!!! டாடா அதிரடி!!!!

இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை செய்யும் சில நிறுவனங்களில் ஒன்றாக தைபேயைச் சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஆலை கர்நாடகத்தில் உள்ளது. கர்நாடகத்தில் உள்ள இந்த நிறுவன ஆலை கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. இந்த ஆலையை முழுமையாக 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க டாடா குழுமம் காய் நகர்த்தி வருகிறது. இந்த டீல் படியும்பட்சத்தில் ஐபோனை தயாரிக்கும் நேரடி இந்திய நிறுவனமாக டாடா குழுமம் இருக்கும் சீனா மட்டுமே இந்த துறையில் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலையில் தற்போது இந்திய நிறுவனம் ஒன்று இத்தனை பெரிய டீலை முடிக்க உள்ளது சீனாவை மட்டுமே நம்பி இருக்காமல் இந்திய நிறுவனம் ஒன்றில் அசெம்பிள் செய்யும் பட்சத்தில் அமெரிக்காவின் ஐபோன் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் மின்னனு சாதனங்கள் மற்றும் உயர் தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்வதே டாடா குழுமத்தின் முக்கிய நோக்கம் என்று அதன் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். விஸ்ட்ரான் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்து வரும் சூழலில் டாடவிடம் நிறுவனத்தை கொடுத்துவிட்டு வெளியேறவே அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்திய அளவில் ஆயரத்து 250 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள விஸ்ட்ரான் நிறுவனம், அரசாங்கத்தின் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை பெறும் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. விஸ்ட்ரானுக்கு அடுத்தபடியாக சாம்சங் 900 கோடியும்,பாக்ஸ்கான் 650 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளன. உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.