அவங்கள காசு கொடுக்கச் சொல்லுங்க !!!!
இந்தியாவில் இணைய வசதி தொடங்கியதில் இருந்து 4ஜி சேவை வந்த பிறகுதான் ஓடிடி தளங்களின் வளர்ச்சி கட்டுக்கு அடங்காமல் இருக்கிறது. இந்த நிலையில் ஓடிடி நிறுவனங்கள் இதுவரை செல்போன் நிறுவனங்களுக்கு பெரிதாக பணம் தருவதில்லை. இந்நிலையில் ஓடிடி நிறுவனங்கள் தங்களுக்கு பணம் தரவேண்டும் என்றும் இதற்கு மத்திய அரசு தான் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று தொலைதொடர்பு நிறுவனங்கள் முறையிட்டுள்ளன. இதனை 4ஜி சமயத்திலேயே செய்திருந்தால் பிரச்சனை இத்தனை பெரியதாக வந்திருக்காது என்று செல்போன் நிறுவனங்கள் புலம்புகின்றன. தற்போது 5ஜி அடித்து நொறுக்கி பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் மீண்டும் செல்போன் நிறுவனங்கள் மத்திய அரசை நாடியுள்ளனர். 5G கட்டமைப்புக்கு ஓடிடி நிறுவனங்கள் பணம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். உலகளவில் இந்த விவாதம் போய்க்கொண்டேதான் இருக்கிறது. ஏனெனில் என்னால்தான் நீ வளர்ந்தாய் உண்ணால் நான் வளர்ந்தேன் என்று ஓடிடி மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் இடையே கடும் விவாதம் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை. ஐரோப்பா மற்றும் பிரேசிலிலும்இதே பிரச்சனை உள்ளது. இந்த நிலையில் ஐரோப்பியாவில் வரும் 19ம்தேதி இறுதி கெடு விதிக்கப்பட்டுள்ளது கடந்தாண்டு நவம்பரில் இருந்தே இந்தியாவில் இந்த பிரச்னை உள்ளது. பணம் தருவது தொடர்பாக தலையிட்டால் இந்தியாவில் முதலீடு குறையும் என்றும் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அரசாங்கம் அமைதி காப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ ஓடிடி நிறுவனங்களும், தொலை தொடர்பு நிறுவனங்களும் அடித்துக்கொண்டாலும் வாடிக்கையாளர்கள் அதுவரை கூடுதல் கட்டணம் இல்லாமல் படங்களை ரசிக்க முடியும் என்பது மட்டும் நிச்சயம்.