வரலாறு காணாத உச்சத்தில் விமான எரிபொருள் விலை
விமான எரிபொருள் விலையில் சமீபத்தில் ஏற்பட்ட உயர்வுக்குப் பிறகு வரும் நாட்களில் விமான கட்டணம் மேலும் உயரக்கூடும்.
விமான எரிபொருள் விலையை ஜூன் 16 முதல் உயர்த்துவதாக அரசு ஆதரவு பெற்ற எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs) அறிவித்துள்ளன. இந்த உயர்வுக்குப் பிறகு, ஜெட் எரிபொருள் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.
டெல்லியில் ஒரு கிலோலிட்டருக்கு ₹1,41,232.87 ரூபாயும் கொல்கத்தாவில் கிலோலிட்டருக்கு 46,322.23 ரூபாயும், மும்பையில் ஒரு கிலோலிட்டருக்கு ₹1,40,092.74 ரூபாயும், சென்னையில் ஒரு கிலோலிட்டருக்கு ₹1,46,215.85 ரூபாயும், ஜெட் எரிபொருள் விலை கடைசியாக ஜூன் 1ஆம் தேதி திருத்தப்பட்டது.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த சில காலாண்டுகளில் விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. இந்தியாவில் ஒரு விமான நிறுவனத்தை நடத்துவதற்கான செலவில் ATF 30-40% ஆகும், மேலும் அதன் விலைகள் அதிகரிப்பது லாப வரம்பைப் பாதிக்கும்.
பயணிகள் தங்கள் விமான டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். 2022ல் விமானக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. மே மாதத்தில் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் பிரபலமான வழித்தடங்களில் 50-75% அதிகரித்துள்ளது