கிரிடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்துக்கு..
ஜூலை மாதம் 1 ஆம் தேதியில் இருந்து கிரிடிட் கார்டு வைத்திருப்போருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது 3 ஆவது நபர் செயலி மூலம் கிரிடிட் கார்டு கடன்களை கட்டமுடியாத சூழல் ஏற்ப்டடுள்ளது. இதனால் கிரெட், பேடிஎம், போன்பே, அமேசான் பே ஆகிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 ஆம் தேதி முதல் பாரத் பில் பேமண்ட் சிஸ்டம் என்ற முறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் குறைநிறைகளை கேட்க முடியும் என்று அரசு தெரிவிக்கிறது. சில நிறுவனங்கள் கிரிடிட் கார்டு பணப்பரிவர்த்தனைகளை ஜூலை 1க்கு பிறகும் செய்து வருகின்றன. எனினும் அந்த செயல் ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு எதிரானதாகும். தனியார் வங்கிகளில் முக்கியமானதாக கூறப்படும் ஐசிஐசிஐ , எச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கி ஆகிய வங்கிகளே இதுவரை பிபிபிஎஸ் திட்டத்தை இதுவரை அமல்படுத்தவில்லை. எஸ்பிஐ, கோடக் மகிந்திரா, இண்டஸ் இண்ட் உள்ளிட்ட வங்கிகளின் கிரிடிட் கார்டு பணம் செலுத்தும் முறைகளில் மட்டும் bbps முறை அமலில் உள்ளது. மொபைல் செயலிகள், வங்கி கிளைகள்வாயிலாக கடன்களை கட்டுவதற்கான வசதியே BBPS நுட்பமாகும். கிரிடிட் கார்டுகளை மட்டுமே நம்பி வணிகம் நடத்தும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த புதிய நுட்பம் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.