எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..
பிரபல தனியார் வங்கியான எச்டிஎப்சி தனது கிரிடிட் கார்டுகளுக்கான கட்டணத்தை நாளை முதல் உயர்த்த இருக்கிறது. அதாவது வீட்டு வாடகை, கல்விக்கட்டணம் மற்றும் பிற சேவைகளுக்கு கிரிடிட் கார்டுகளை பயன்படுத்தினாலும் அதற்கு அதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட உள்ளது. குறிப்பாக தனியார் செயலிகளான கிரெட், செக், மொபி குவிக், பிரீசார்ஜ் உள்ளிட்டவற்றின் வாயிலாக வீட்டு வாடகை செலுத்தினால் 1 விழுக்காடு கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக 3,000 ரூபாய் வரை இதற்காக வசூலிக்கப்படும். இதேபோல் எச்டிஎப்சி கிரிடிட் கார்டுகளை வைத்து வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டாலும் அதற்கும் கூடுதல் வரி விதிக்கப்பட இருக்கிறது. அதன்படி 15000 ரூபாய்க்குள் பெட்ரோல், டீசல் போட்டால் எந்த கூடுதல் கட்டணமும் கிடையாது. அதே நேரம் அதை விட அதிம் எரிபொருள் நிரப்பினால்,1 விழுக்காடு கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. மற்ற சேவைகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை வரி கிடையாது. பள்ளியோ, கல்லூரி கட்டணத்தை நேரடியாக சென்று கட்டினால் எந்த வரியும் கிடையாது. அதேநேரம் கிரெட், செக், மொபி குவிக், பிரீசார்ஜ் உள்ளிட்டவற்றின் வாயிலாக வீட்டு வாடகை செலுத்தினால் 1 விழுக்காடு கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக 3,000 ரூபாய் வரை இதற்காக வசூலிக்கப்படும். சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு 3.5%வரியும், கட்டணத்தை தாமதமாக செலுத்தினால், 100 ரூபாய் வரை இருந்தால் எந்த வரியும் கிடையாது. 100 முதல் 500 வரை திருத்தப்பட்ட கட்டணம் 100 ரூபாய், அதிகபட்சமாக 50ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக நிலுவையில் இருந்தால் அதற்கு 1,300ரூபாய் வரை வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எச்டிஎப்சி நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.