நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு !!!
உலகளவில் பிரபல ஓடிடி நிறுவனமாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் திகழ்கிறது. இந்தநிறுவனத்தின் செயலிக்கு பெரிய சிக்கலையும்,தலைவலியையும் ஏற்படுத்தியது பாஸ்வேர்ட் பகிர்வதுதான். நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டுகளை பகிர்வதை தடுக்க நூறு நாடுகளுக்கும் மேலாக புதிய உத்திகளை நெட்பிளிக்ஸ் களமிறக்குகிறது.அமெரிக்கா, பிரிட்டன்,பிரான்ஸ்,ஆஸ்திரேலியா, மெக்சிகோ உள்ளிட்ட சில நாடுகளுக்கு நெட்பிளிக்ஸ் அண்மையில் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஒருவர் ஒரு டிவைசில் மட்டுமே நெட்பிளிக்ஸ் கணக்கை பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒரு டிவைசுக்கு மேல் பார்க்க வேண்டுமானால் தற்போதைய சந்தாவுடன் எத்தனை டிவைஸ்களில் பார்க்கிறார்களோ அத்தனைக்கும் இந்திய மதிப்பில் கூடுதலாக 660 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் ஹிஸ்ட்ரியை வாடிக்கையாளரே பார்த்துக்கொள்ளும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நெட்பிளிக்சுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.வெளிநாடுகளில் கொடுக்கப்பட்டுள்ள நெருக்கடிகள் இந்தியாவில் இதுவரை இன்னும் கொண்டுவரப்படவில்லை.வருங்காலத்தில் இந்த கிடுக்கிப்பிடி இந்தியாவிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.