ஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு..
பாரத ஸ்டேட் வங்கியின் இணைய வழி வங்கி பரிவர்த்தனை, யோனோ லைட், யோனோ பிஸினஸ் வெப் மற்றும் மொபைல் செயலி ,யோனோ, யூபிஐ செயலிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி இயங்கவில்லை. ஆண்டுதோறும் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த சேவைகள் நிறுத்தப்பட்டன. பகல் 12.20 மணி முதல் பகல் 3 மணி 20 நிமிடங்கள் வரை இந்த சேவை ரத்து செய்யப்பட்டதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. குறிப்பிட்ட இந்த சேவைகள் நிறுத்தப்பட்ட அதே நேரம் யுபிஐ லைட் மற்றும் ஏடிஎம் மையங்கள் மட்டும் இயங்கின.. கடந்த ஞாயிறுறுக்கிழமை நெப்ட் சேவையை தவிர்க்க எச்டிஎப்சி அறிவுறுத்தி இருந்தது. ஆண்டு இறுதி பணிகளை முடிப்பதற்கே பெரும்பாலான வங்கிகள் பாடுபட்டன. இதனால் மக்கள் பெரும் அவதியை சந்தித்தனர். பாரத ஸ்டேட் வங்கி தனது டெபிட் கார்டு சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது. கிளாசிக், சில்வர், குளோபல், காண்டாக்ட் லஸ் கடன் அட்டைகளான யுவா, கோல்ட்,காம்போ, பிளாட்டினம் வகை டெபிட் கார்டுகளுக்கு வருடாந்திர பராமரிப்பு கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் 125 மில்லியன் இணைய வங்கி பயனர்கள் இருக்கின்றனர். அதேபோல் 133 மில்லியன் மொபைல் பேங்கிங் வாடிக்கையாளர்களும் உள்ளனர். யோனோ செயலியினை 7.05 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 2024நிதியாண்டின் 3 ஆவது காலாண்டில் மட்டும் 33.1 லட்சம் பேர் புதிதாக பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்களாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிட வேண்டிய அம்சமாகும்.