EV கார் தயாரிக்கும் Audi – வாகன ஓட்டிகள் Happy..!!
Audi கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் உள்ளூரில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருகிறது.
Audi கார் இந்திய பிரிவு தலைவர் தகவல்:
ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Audi-ன் தயாரிப்புகள் பலராலும் விரும்பப்படுவதாக உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உள்ளூரில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக Audi கார் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம் தயாரிக்கவுள்ள எலக்ட்ரின் கார்களின் அனைத்து பாகங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.
Audi கார் நிறுவனம் அறிவிப்பு:
சுற்றுச்சூழல் மாசு குறைப்பை மனதில் கொண்டு, காலத்தின் தேவையை உணர்ந்து Audi நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், வரும் 2033-ஆம் ஆண்டுக்குள் Audi நிறுவனம் முழுவதுமாக மின்சார கார் தயாரிக்கும் நிறுவனமாக மாறி விடும் எனவும் பல்பீர் சிற் தில்லான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு மாதங்களில், ஆடி இந்தியா ஐந்து எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதாகவும், இந்த 12 மாதங்களில் தொடர்ந்து விற்பனை செய்யும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் ஆடியின் ஐந்து எலக்ட்ரிக் கார்கள் e-tron 50, e-tron 55, e-tron Sportback 55, e-tron GT, RS e-tron GT. 2020 ஆம் ஆண்டில் 1,639 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3,293 யூனிட்கள் சில்லறை விற்பனையில் இரண்டு மடங்கு உயர்ந்து, அதன் பெட்ரோலில் இயங்கும் க்யூ-ரேஞ்ச் மற்றும் ஏ-செடான்களுடன் இணைந்து இவை முக்கியப் பங்காற்றியுள்ளன.
ஆடியின் ஜெர்மன் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ்தனது EQS எலக்ட்ரிக் செடானை இந்தியாவில் அசெம்பிள் செய்து 2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.