ஆட்டோமொபைலுக்கு அதிகம் செலவு…

இந்தியாவில் இருசக்கரம் மற்றும் 3 சக்கரம் மற்றும் வணிக வாகனங்களின் விற்பனை மற்றும் சர்வீஸ் சார்ந்த தரவுகளை FADAஎன்ற அமைப்பு சேமித்து வருகிறது. இந்த நிலையில் அந்த அமைப்பின் தலைவர் மனீஷ் ராஜ் சிங்கானியா வாகன விற்பனை குறித்து பேசியுள்ளார். அதில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் வாழ்கிறோம் என்பதால் விரும்பிய வாகனங்களை அதிகம் தேர்வு செய்வதாக கூறியுள்ளார். இந்த ஒரு மாதத்தில் மட்டும் பயணிகள் வாகனம் மட்டுமின்றி அனைத்து வாகனங்களும் 10விழுக்காடு அதிகம் விற்றுள்ளது என்றார்.ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 15 ஆயிரத்து153 யூனிட்டுகள் விற்பனை செய்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் இந்த மாதமும் வாகன விற்பனை அதிகம் இருக்கும் என்றும் மனீஷ் தெரிவித்துள்ளார். கடந்த 3,4 மாதங்களில் இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் 10 முதல் 15 விழுக்காடு உயர்ந்திருப்பதாக கூறியுள்ளார். நவராத்திரியில் இருந்து தீபாவளி வரையிலான காலகட்டம் வாகன விற்பனை அதிகம் நடக்கும் என்று கூறப்படுகிறது.10 முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எஸ்யுவி வகை வாகனங்களுக்கு மக்கள் அதிகம் செலவு செய்கின்றனர். கொரோனாவுக்கு பிறகு விற்பனை 50விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.எளிதான பைனான்ஸ் வசதி, அடுத்தடுத்து புதிய ரக கார்களும் விற்கப்படுகின்றன. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.கிராமபுறங்களிலும் வாகனங்களை வாங்க ஆர்வம் அதிகரித்துள்ளது.வாகனங்களில் பயணிகள் வாகனங்களில் மின்சார வாகனங்களின் பங்களிப்பு 2.5 முதல் 5%வரை இருப்பதாக மனீஷ் கூறியுள்ளார்.