உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை – பியூஷ் கோயல்
உலகளாவிய ரீதியில் போட்டித்தன்மையுடன் இருக்கவும், மானியங்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (PLI) திட்டங்களின் பலன்களைப் பெறுமாறு தொழில்துறையினரை வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கேட்டுக் கொண்டார்.
வியாழன் அன்று டிபிஐஐடி மற்றும் ஃபிக்கி ஏற்பாடு செய்த முதலீட்டாளர்களின் வட்டமேசை கூட்டத்தில், எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் நாட்டிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவுவதோடு, ஏற்றுமதிக்கான உபரியையும் உருவாக்க முடியும் என்று கோயல் கூறினார்.
பிஎல்ஐ திட்டத்தின் கீழ் ஏர்-கண்டிஷனர்கள் மற்றும் எல்இடி விளக்குகளுக்கான ₹6,238 கோடி திட்டத்திற்கான விண்ணப்ப சாளரத்தை அரசாங்கம் மீண்டும் திறந்துள்ளது என்றும் அதானி காப்பர் டியூப்ஸ், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்
14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 111 இடங்களில் இந்த 61 நிறுவனங்கள் உதிரிபாக உற்பத்தி ஆலைகளை நிறுவியுள்ளன என்றும் இவைகளினால் வேலைவாய்ப்பு உருவாகும் என்று கோயல் கூறினார்.