Citi ஊழியர்களின் ஊதியம் மாற்றப்படாது.. – Axis அறிவிப்பு..!!
ஆக்சிஸ் வங்கியில் சேரத் தேர்ந்தெடுக்கும் சிட்டி பேங்க் ஊழியர்கள், தற்போது உள்ளதைப் போன்ற ஊதியக் கட்டமைப்பை அனுபவிப்பார்கள் என ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
புதிய சலுகைகளை ஏற்றுக்கொள்ளாத பணியாளர்கள் வேறு வேலையைத் தேடுவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படும் என்று ம் தகவல் வெளியாகியுள்ளது.
Axis கடந்த வாரம் Citi ஊழியர்களுக்கு அவர்களின் தற்போதைய ஊதியத்தைப் போன்றோ அல்லது அதற்கும் அதிகமாகவோ வழங்கப்படும் என்று கூறியிருந்தது. இருப்பினும், சிட்டி வங்கியின் ஊழியர்களை அதிக ஊதியத்தில் தக்க வைத்துக் கொள்ளும் ஆக்சிஸ் வங்கியின் முயற்சி, அதன் ஊழியர்களுக்குப் பிடிக்காமல் போகலாம் என்று கருதப்படுகிறது.
சிட்டி ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஊதியக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதன் மூலம், இணைப்பு முடிந்ததும் அவர்களில் பெரும்பாலோர் ஆக்சிஸுக்குச் செல்வதை உறுதிசெய்ய ஆக்சிஸ் வங்கி முயற்சிக்கிறது.
சிங்கப்பூர், ஹாங்காங், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் லண்டனில் உள்ள நான்கு மையங்களில் கவனம் செலுத்துவதால், இந்தியா உட்பட 13 நாடுகளில் உள்ள வணிகங்களில் இருந்து வெளியேறுவதாக கடந்த ஆண்டு ஏப்ரலில் சிட்டி குழுமம் தெரிவித்திருந்தது. அதன்படி, இந்தியாவை சேர்ந்த முன்னணி தனியார் வங்கியான Axis வங்கி, தனது சேவையை விரிவாக்கம் செய்யும் விதமாக, சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.