நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய பாபா ராம்தேவ்..
விஞ்ஞான ரீதியிலான பொருட்களை விற்பதாக பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்து சிக்கலில் சிக்கியது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் , ஆச்சார்யா பாலகிருஷ்ணா உள்ளிட்டோர் நிபந்தனையற்ற மன்னிப்பை பிரமாணப் பத்திரங்களாக தாக்கல் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாகவும் கூறியுள்ளனர். எனினும் இந்த விவகாரத்தில் இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்க இருக்கிறது. முன்னதாக இந்த வழக்கில் பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது. மேலும் விஞ்ஞான பூர்வமான மருந்து கோவிட் கிருமியை விரட்டும் என்று கூறி பதஞ்சலி விளம்பரம் செய்யும்போது,மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியது. இது பொய் சத்தியம் என்று கூறிய நீதிபதி ஹிமா கோலி, பாபா ராம்தேவ் சாதாரண நபர் இல்லை என்று கூறினார். கடந்தாண்டு நவம்பரில் 21 ஆம் தேதி எந்த விதிகளையும் மீறக்கூடாது என்று பதஞ்சலி நிறுவனத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். கடந்த மார்ச் 19 ஆம் தேதி பாபா ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. விதிகளை மீறி விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனத்தை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது பேசுபொருளாகியுள்ளது.