வோடஃபோனுக்கு பின்னடைவு..
வோடஃபோன் நிறுவனம் தனது வணிகத்தில் பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்த வோடஃபோன், அண்மையில் அங்கு மாற்றப்பட்ட சட்டங்களால் சந்தையில் முன்னணி இடத்தை இழந்து வருகிறது. ஜெர்மனியில் பின்னடைவு ஏற்படும் என்று முன்பே எதிர்பார்த்ததாகவும், அதே நேரம் முதல் காலாண்டில் வருவாய் மட்டும் 5.4%ஆக இருந்ததாக மூத்த நிர்வாகியான மார்கரிட்டா டெலா வாலே தெரிவித்துள்ளார். ஆப்ரிக்காவிலும், துருக்கியிலும் வருவாய் அதிகளவில் வருவதாகவும், ஐரோப்பாவில் பணவீக்கம் அதிகம் உள்ளதால் அங்கு வருவாய் மந்தமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தாண்டின் இரண்டாம் பாதியில் நிலைமை மாறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். வோடஃபோன் நிறுவனத்தின் பங்குகள் 2 % குறைந்துள்ளதாகவும், ஜெர்மனியில் அபார்ட்மன்ட்களில் தொலைக்காட்சிகளில் அதிகளவில் டிவிகள் விற்கப்படுவதாகவும், இதில் தங்கள் வருவாய் பின்னடைவை சந்தித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 11பில்லியன் யூரோக்களாக மொத்த வருவாய் இருக்கும் என்று வோடஃபோன் நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது. அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் 2.4 பில்லியன் யூரோக்கள் பணப்புழக்கம் இருக்கும் என்றும் அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது.