பஜாஜ் பைனான்சுக்கு 2 கோடி ரூபாய் அபராதம்..
விதிகளை மீறியதற்காக பிரபல நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்சுக்கு IRDAI அமைப்பு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்தியாவில் காப்பீடு மற்றும் அது சார்ந்த பணிகளை நிர்வகிக்கும் அமைப்பாக IRDAI அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு கடந்த 16 ஆம் தேதி பஜாஜ் பைனான்சுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி மற்றும் அதே ஆண்டு மார்ச் 5 ஆகிய தேதிகளில் ஆய்வு நடத்தியதாகவும், அப்போது 2018-20 ஆகி நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் சோதிக்கப்பட்டன. மார்ச் 2024-ல் இது தொடர்பாக விளக்கம் கேட்டு அந்த அமைப்பு பஜாஜ் பைனான்சுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி கடுமையான உத்தரவை அந்நிறுவனத்துக்கு IRDAI அமைப்பு அளித்துள்ளது. தற்போதைய செயல்பாடுகளை பாதிக்காத வகையில் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாகவும் IRDAI அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தேசிய பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்சின் பங்குகள் 0.27 விழுக்காடு குறைந்துள்ளது. IRDAI அமைப்பின் கட்டணமாக 1 கோடி ரூபாயும், வாடிக்கையாளரின் தரவுகளை முறையாக பராமரிக்காததால் 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 21 விழுக்காடு வளர்ச்சி அடைந்திருப்பதாக அறிவித்தது. வரிகள் செலுத்தியது போக 3825 கோடி ரூபாய் வருவாயை அந்நிறுவனம் லாபமாக ஈட்டியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த தொகை வெறும் 2023-24 நிதியாண்டின் 4 ஆவது காலாண்டில் மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் இந்த தொகை 3158 கோடி ரூபாயாக இருந்தது. அந்நிறுவனம் மொத்தம் 3.34 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துகளை நிர்வகித்து வருகிறது. கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் மட்டும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சொத்து நிர்வாக மதிப்பு 19,647 கோடி ரூபாய் உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.