4 % சரிந்த பஜாஜ் பினான்ஸ் பங்கு…
வாடிக்கையாளர்கள் மற்றும் கடன் வாங்குவோருக்கு தெளிவான விளக்கம் தருவதில்லை என்று எழுந்த புகாரை அடுத்து ரிசர்வ் வங்கி அண்மையில் பஜாஜ் பினான்ஸ் நிறுவனத்தில் கடன்களில் இரண்டு உட்பிரிவுகளுக்கும் தடை விதித்து ஆணையிட்டுள்ளது. இதனால் வியாழக்கிழமை இந்திய பங்குச் சந்தையில் பஜாஜ் பினான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4 விழுக்காடு வரை சரிவை கண்டன. எனினும் அந்த சரிவு உடனே மீண்டுவந்துவிட்டது.மும்பை பங்குச்சந்தையில் 4 விழுக்காடு வரை சரிவை கண்ட அந்நிறுவன பங்குகள் சிறிது நேரத்தில் வலிமையாக மாறியது. சிறிது நேரத்தில் யூடர்ன் அடித்து 0.4%ஏற்றத்தை கண்டன. ரிசர்வ்வங்கி வகித்த தடை உத்தரவு 6 அல்லது 8 வாரங்களில் திரும்பப்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று பஜாஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு செப்டம்பர் நிலவரப்படி 7 கோடியே 70 லட்சம் வாடிக்கையாளர்களை பஜாஜ் பினான்சியல் நிறுவனம் கொண்டுள்ளது.அதில் 4.2 கோடி அளவு EMI கார்டுகள்,வழங்கப்பட்டுள்ளன.40 லட்சம் பேருக்கு இன்ஸ்டாEMI கார்டுகள் உள்ளன.
உண்மையில் ரிசர்வ்வங்கியின் தடையால் தரமான சேவை கிடைக்கும் என்று பஜாஜ் நிறுவன அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், ரிசர்வ் வங்கி தடை காரணமாக பஜாஜ் பினான்ஸ் நிறுவன பங்குகள் 6%வரை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று CLSAஅமைப்பு கணித்திருக்கிறது. 9,500ரூபாய் என்ற அளவுக்கு பஜாஜ் நிறுன் பைக் வந்தால் பஜாஜ் பினான்ஸ் தகுதியுடன் பஜாஜ் குழம பங்குகளை வாங்கிக்கொள்வது சிறந்தது என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது