ரிவியூவுக்கு சென்ற பஜாஜ் பைனான்ஸ்.,
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியல்லாத நிதி நிறுவனமாக திகழ்கிறது பஜாஜ் பைனான்ஸ், இந்த நிறுவனத்தின் இரண்டு புதிய திட்டங்களுக்கு கடந்தாண்டு ரிசர்வ் வங்கி கடிவாளம் போட்டது. ரிசர்வ் வங்கி கேட்ட அனைத்து விதிகளையும் பின்பற்றியுள்ளதால், மீண்டும் ரிசர்வ் வங்கியிடமே பஜாஜ் பைனான்ஸ் முறையிட இருக்கிறது. “E.com” இன்ஸ்டா ஈஎம்ஐ கார்டு ஆகிய இரண்டு சேவைகளையும் நிறுத்த கடந்தாண்டு ரிசர்வ் வங்கி தடை விதித்து இருந்தது. குறிப்பிட்ட இரண்டு தயாரிப்புகளுக்கும் விதிகளை பின்பற்றியதால் மீண்டும் தங்களுக்கு சேவை அளிக்க உரிமை வேண்டும் என்று பஜாஜ் பைன்ஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. கடந்தாண்டு நவம்பர் 15 ஆம் தேதி பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி இந்த கட்டுப்பாடுகளை விதித்ததுடன், குறிப்பிட்ட இரண்டு சேவைகளையும் உடனடியாக நிறுத்த ஆணையிட்டது. குறிப்பாக டிஜிட்டல் லெண்டிங் எனப்படும் டிஜிட்டல் வாயிலான விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்பதே ரிசர்வ் வங்கி கூறும் பிரதான குற்றச்சாட்டு. இதனை சரி செய்துவிட்டதாகவும், வாடிக்கையாளர்களுக்கு கடன் அட்டை விவரங்களை இனி வழங்க இருப்பதாகவும் பஜாஜ் பைனான்ஸ் தெரிவித்து, ரிவியூவுக்கு சென்றுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட்ட பஜாஜ் பைனான்ஸ், இந்த ரிவீயூ குறித்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.