அதிர்ச்சி முடிவெடுத்த பிரபல நிறுவனம்..
குஜராத்தை சேர்ந்த தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனம் அதன் பங்குகளில் ஒரு பகுதியை தனியார் பங்கு (PE) முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் பங்கு விற்பனையில் PE நிறுவனங்கள் ஆர்வம் காட்டாததே இதற்கு காரணம். TPG மற்றும் Temasek போன்ற PE நிறுவனங்கள், ₹40,000 கோடி மதிப்பீட்டிற்கான பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைத்தன.
பாலாஜி வேஃபர்ஸ் நிறுவனம், ₹40,000-45,000 கோடி மதிப்பீட்டிற்குக் கீழே 10 சதவீத பங்குகளை விற்காது என்றும், ஆனால் சிறிய பங்குகளை விற்கத் தயாராக இருப்பதாக அதன் நிர்வாக இயக்குநர் சந்து விரானி கூறியுள்ளார். இருப்பினும், இவற்றை விற்க அவசரம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ITC மற்றும் PepsiCo ஆகியவையும் இந்த விற்பனையில் முதலில் ஆர்வம் காட்டின. பின்னர் பின்வாங்கின.
ராஜ்கோட்டை தலைமையிடமாகக் கொண்ட பாலாஜி வேஃபர்ஸ், மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் வலுவான இருப்பைக் கொண்ட பாலாஜி பிராண்டின் கீழ் சிப்ஸ், வறுத்த தின்பண்டங்கள் மற்றும் மிட்டாய் பொருட்களை தயாரிக்கிறது.
இவற்றை இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவிற்கும் ஏற்றுமதி செய்கிறது.
இந்த நிறுவனம் 2023-24 ஆம் ஆண்டில் நிகர விற்பனையை 10.7 சதவீதம் அதிகரித்து ₹5,453.7 கோடியாக உயர்த்தியது. வரிக்குப் பிந்தைய லாபம் 41.4 சதவீதம் அதிகரித்து ₹578.8 கோடியாக உயர்ந்துள்ளதாக கேபிடலைன் தெரிவித்துள்ளது.
