இந்தியாவில் தடை செய்யப்படும் கிரிப்டோ கரன்சி ! பரபரப்பான 10 தகவல்கள் !
இந்திய அரசாங்கம் ஒரு சில குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் தவிர மற்ற அனைத்தையும் தடை செய்யவும், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட டிஜிட்டல் நாணயத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு மசோதாவை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
- அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிக்கான மசோதா-2021, நவம்பர் 29 முதல் தொடங்க உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் அறிமுகப்படுத்த பட்டியலிடப்பட்டுள்ளது.
2. இந்த மசோதா “இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான ஒரு வசதிகட்டமைப்பை உருவாக்க” வாய்ப்பளிக்கிறது.
3. இந்தியாவில் அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளையும் தடை செய்யும் என்று தெரிகிறது. எனினும், சில விதிவிலக்குகள் கிரிப்டோகரன்சி மற்றும் அதன் பயன்பாடுகளின் அடிப்படை தொழில்நுட்பம் செயல்பட அனுமதிக்கக்கூடும்.
4. தற்போது, இந்தியாவில் கிரிப்டோகரன்சிகள் பயன்படுத்த எந்த கட்டுப்பாடு அல்லது எந்த தடை யும் இல்லை.
5. பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாத தொடக்கத்தில், மூத்த அதிகாரிகளுடன் கிரிப்டோகரன்சிகள் குறித்து ஒரு கூட்டத்தை நடத்தினார், அப்போது இந்த பிரச்சினையை சமாளிக்க வலுவான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டது.
6. சமீபத்தில் காலங்களில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகளின் மூலம் அதிக வருமானத்தை உறுதியளிக்கும் திரைப்பட நட்சத்திரங்கள் இடம்பெறும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, அத்தகைய விளம்பரங்கள் தவறான முறையில் முதலீட்டாளர்களை கவர்ந்திழுக்க பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது
7. கடந்த வாரம், பா.ஜ.க உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா தலைமையிலான நிதி நிலைக்குழு, கிரிப்டோ பரிமாற்றங்கள், பிளாக்செயின் மற்றும் கிரிப்டோ சொத்து கவுன்சில் (பிஏசிசி) ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்து, கிரிப்டோகரன்சிகள் தடை செய்யப்படக்கூடாது, ஆனால் அது ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
8. இந்திய ரிசர்வ் வங்கி, கிரிப்டோகரன்சிகளுக்கு எதிராக தனது வலுவான கருத்துக்களை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்தது. மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு கிரிப்டோ வர்த்தகம் கடுமையான அச்சுறுத்தல்களை முன்வைக்கிறது என்று ரிசர்வ் வங்கி தொடர்ந்து தெரிவித்து வந்தது.
9. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸேவும் இந்த மாத தொடக்கத்தில் கிரிப்டோகரன்சிகளை அனுமதிப்பதற்கு எதிரான தனது கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தினார்.
10. தனியார் டிஜிட்டல் நாணயங்கள் / மெய்நிகர் நாணயங்கள் / கிரிப்டோகரன்சிகள் கடந்த தசாப்தத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட பிரபலமடைந்துள்ளன.இங்கே, கட்டுப்பாட்டாளர்களும் அரசாங்கங்களும் இந்த நாணயங்கள் பற்றி சந்தேகம் கொண்டுள்ளனர் மற்றும் தொடர்புடைய அபாயங்கள் குறித்து அஞ்சுகின்றனர்.