மோசடி கணக்குகளுக்கு தடை?
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஸ்வாமிநாதன் அண்மையில் வங்கிகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் வங்கிகளில் மோசடி செய்வதற்காகவே கிடப்பில் வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான போலி கணக்குகளை நீக்குவது குறித்து கடுமை காட்டியுள்ளார். எந்த காரணமும் இல்லாமல் குறிப்பிட்ட மோசடி வங்கிக் கணக்குகள் செயல்பாட்டில் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த வாரத்தில் நடந்த கூட்டம் ஒன்றிலும் ரிசரவ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இது பற்றி வங்கிகளிடம் எச்சரித்தார். டிஜிட்டல் மோசடிகளை களையவே இந்த மாதிரியான அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றனஸ்ரீ வங்கிகளின் நிதி அதிகாரிகள் வங்கிககளின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியிடம் வெளிப்படைத்தன்மையுடன் சில நேரங்களில் பேசித்தான் ஆகவேண்டும் என்று கூறிய அவர்,தலைமை தணிக்கை குழுவிடம் இதுபற்றி ஆலோசிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதிகப்படியான டிஜிட்டல் சேனல்கள் சந்தைக்கு வந்துவிட்ட நிலையில், மூன்றாம் தரப்பு சேவை வழங்கவேண்டியுள்ளவர்களை நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். தணிக்கையில் உள்ளவர்கள் எந்த சமரசமும் இல்லாமல் தணிக்கை செய்ய வேண்டும் என்றும், தணிக்கை முடிவிகளை பாதுகாக்கும் வகையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் சுவாமிநாதன் குறிப்பிட்டார்.