IDFC MF-ஐ வாங்கும் Bandhan FHL.. IDFC MF-ன் சந்தை மதிப்பு ரூ.4,500 கோடி..!!
IDFC Mutual Fund நிறுவனத்தை BandhanFinancial Holdings நிறுவனம் வாங்கவுள்ளது.
கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் பந்தன் வங்கியின் தாய் நிறுவனமான பந்தன் ஃபைனான்சியல் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம், ஐடிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை வாங்க இருக்கிறது.
கடந்த 2000-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட IDFC Mutual Fund நிறுவனம் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில், 9-வது பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமாக உள்ளது. இது தற்போது, 1.21 கோடி லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கையாண்டு வருகிறது.
IDFC Mutual Fund நிறுவனத்தை Invesco Mutual Fund, Warburg Pincus ஆகிய நிறுவனங்கள் வாங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், தற்போது, BandhanFinancial Holdings சிங்கப்பூரை சேர்ந்த சில நிறுவனங்களுடன் சேர்ந்து IDFC Mutual Fund நிறுவனத்தை வாங்க இருக்கிறது.
அவ்வாறு வாங்கப்படும்போது IDFC Mutual Fund நிறுவனத்தின் மதிப்பு 4,500 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக, ஐடிஎஃப்சி மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனம் பங்குச்சந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IDFC Mutual Fund நிறுவனத்தின் 60 சதவீத பங்குகள் BandhanFinancial Holdings நிறுவனத்திடமும், ஜிசிசி, சிரிஸ் கேப்பிடல் ஆகிய நிறுவனங்களிடம் தலா 20 சதவீத பங்குகளும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இவைகளின் இணைப்புக்கு அனுமதி கிடைத்தால், இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் இதுவரையில் நடைபெற்ற மிகப்பெரிய கையகப்படுத்துதல் இதுவாக இருக்கும் என்றும், இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி, செபி ஆகிய அமைப்புகள் அனுமதி அளிக்க 12 மாதங்கள் வரை ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.