பேங்கே திவாலாகி போச்சி, இவருக்கு சொகுசு பயணம் கேக்குது….
உலகின் பல நாட்டு பங்குச்சந்தைகளில் பல லட்சம் கோடியை நஷ்டமடைய வைத்துள்ள சிலிக்கான் வேலி வங்கியின் சிஇஓவாக உள்ளவர் கிரெ்க் பெக்கர். இவர் வேலை பார்த்த நிறுவனம் திடீரென திவாலானதால் உலகமே ஸ்தம்பித்துள்ளது. ஆனால் இவர் ஹவாயில் உள்ள தனது சொகுசு வீட்டுக்கு முதல் வகுப்பு விமான டிக்கெட்டில் பயணித்துள்ளார். நிறுவனம் திவாலானால் சொந்த விருப்பு,வெறுப்பு இருக்காதா என்ன என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் டுவிஸ்டே அங்குதான் இருக்கிறது. அந்த சொகுசு பங்களாவின் மதிப்பு எவ்வளவு தெரியுமா 3 புள்ளி 1 மில்லியன் டாலராகும். நிறுவனம் நஷ்டமான இந்த நேரத்தில் அவரும் அவரின் மனைவியும் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ததுடன், மகிழ்ச்சியான தருணங்களை தங்கள் சமூக வலைதலங்களில் பகிர்ந்துள்ளனர். வங்கி திவாலான அந்த தருணத்துக்கு முன்புதான் அவர் 30 வங்கியின் மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்க முயற்சி செய்துள்ளார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் திறமை பெற்ற சிலிக்கான் வேலி வங்கி,ஒரு மாதத்துக்கு முன்புதான் பலருக்கும் கடனை வாரி வாரி வழங்கியுள்ளனர்.
வங்கியின் பல ஊழியர்களும் பொறுப்பில்லாமல் வீட்டில் இருந்தே பணியாற்றினர். இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ள கிரெக் சுற்றுலாவுக்கும் சென்றிருந்தார்.1983ம் ஆண்டு முதல் கடன் தந்து வந்த அந்த நிறுவனம் திடீரென சரிந்து விழுந்துள்ளது. ஒருகாலத்தில் பணமழையில் நனைந்த இந்த வங்கி, தற்போது உலக பொருளாதார மந்தநிலை காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக இந்த வங்கி திவாலானதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இருந்து 1பில்லியன் டாலர் அளவுக்கு டெபாசிட்களை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிலிக்கான் வேலி வங்கியில் வைத்திருந்தனர் என்பது கூடுதல்
தகவலாகும்.