வங்கித்துறை லாபம் 25 % வீழ்ச்சி ! காரணம் என்ன?
கடன் வழங்கும் துறை வளர்ச்சியின் மந்த நிலை மற்றும் குறைந்த வட்டி விகிதம் காரணமாக 14 காலாண்டுகளில் இல்லாத மோசமான நிலையை வங்கிகள் பதிவு செய்தன. பட்டியலிடப்பட்ட வங்கிகளின் மொத்த வட்டி வருமானம் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் 25 சதவீதம் அளவில் வீழ்ச்சி அடைந்தது. இது 14 காலாண்டுகளில் இல்லாத மிகவும் மோசமானதாக இருந்தது.
ஆனால், வட்டிச் செலவுகள் தொடர்ந்து சரிவு, மோசமான கடன்களுக்கான குறைந்த ஒதுக்கீடு ஆகியவற்றால் ஜூலை – செப்டம்பர் காலாண்டில் வங்கிகள் எப்போதும் இல்லாத நிகர லாபத்தை பதிவு செய்தன. ஜூலை – செப்டம்பரில் தங்கள் முடிவுகளை அறிவித்த 28 பட்டியலிடப்பட்ட வங்கிகளின் காலாண்டு நிகர லாபம் ரூ. 39,643 கோடி. இது ஒரு வருடத்திற்கு முன்பிருந்த 26,844 கோடியில் இருந்து 48 சதவீதம் அதிகம்.
பெருந்தொற்றுக்குப் பிறகான பொருளாதார வளர்ச்சியில் கடன் வழங்கும் துறை அடுத்த காலாண்டில் வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கும் என்றும், வங்கித்துறை நீண்ட கால நோக்கில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்யும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.