பராக்! பராக்!! பராக்!!!!
துவக்கத்தில் மத்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷனுக்கு செய்திகளை வழங்கி வந்த NDTV கடந்த சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சி அடைந்து, இந்திய அளவில் தவிர்க்க முடியாத செய்தி சேனலாக உருவெடுத்தது. எனினும் அதீத கடனால் தவித்த NDTV அண்மையில் பெரும்பங்குகளை உலகின் பெரும்பணக்காரர்களில் ஒருவரான அதானியின் நிறுவனத்துக்கு சென்றது.NDTVயை முழுமையாக கைப்பற்றும் பணியில் அதானி குழுமம் ஈடுபட்டது. நேற்றுடன் AMG நிறுவனத்திடம் NDTVயை ஒப்படைக்கும் பணி நிறைவுற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. NDTVயை நிறுவிய ராதிகா மற்றும் பிரனாய் ராய் இருவரும் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் கவுதம் அதானி நிதானமாக கேட்டுக்கொண்டதாகவும், வெற்றிகரமாக தொலைக்காட்சியை அதானியிடம் ஒப்படைத்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.