ஐடிசி ஹோட்டல்ஸ் பற்றி பாட் கொடுத்த அப்டேட்..
புகையிலையில் இருந்து பிஸ்கட் வரை அனைத்து வியாபாரத்திலும் கொடிகட்டி பறந்த நிறுவனம் ஐடிசி.., இந்த நிறுவனம் அடுத்தடுத்து அசுர வளர்ச்சியை பெற்று வந்தது. இந்நிலையில் அந்த நிறுவனத்தின் குழுமமான ஐடிசி குழுமத்தில் இருந்து ஐடிசி ஹோட்டல்ஸ் மட்டும் தனியாக பிரிக்க ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஐடிசி ஹோட்டல்ஸை பிரிப்பது குறித்து ஐடிசி பங்குதாரர்கள் வாக்களிக்க ஜூன் 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஐடிசி நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரரான பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனமான பாட் நிறுவனம், ஐடிசி ஹோட்டல்ஸில் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. பங்குச்சந்தையில் பட்டியிலிடப்பட்ட பிறகு தன் வசம் இருக்கும் பங்குகளை பாட் விற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 4 அல்லது 6 மாதங்களுக்குள் ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனம் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாட் நிறுவனத்தின் தரவுகளின்படி ஐடிசி ஹோட்டல்ஸ் நிறுவனத்தில் 15.32 விழுக்காடு பங்குகளை வெளிநாட்டு நேரடி முதலீடாக செய்யும் என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம்தான் பாட் நிறுவனம் தன் வசம் இருந்த ஐடிசி நிறுவனத்தின் 3.5விழுக்காடு பங்குகளை 16,690 கோடி ரூபாய்க்கு விற்றது. ஐடிசியில் தற்போது வரை பாட் நிறுவனம் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு 25.51விழுக்காடாக குறைந்திருக்கிறது.